ஆப்நகரம்

இலவச ஏடிஎம் பரிவர்த்தனை கோரிய மனு தள்ளுபடி

ஏடிஎம் மையங்களில் இலவசமாக பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

TNN 9 Jun 2016, 10:17 pm
ஏடிஎம் மையங்களில் இலவசமாக பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
Samayam Tamil madras hc dismisses pil seeking unlimited free atm transactions
இலவச ஏடிஎம் பரிவர்த்தனை கோரிய மனு தள்ளுபடி

இதுதொடர்பாக, தமிழரசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் விவரம்:

ஏடிஎம் சேவை வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் ஏடிஎம் சேவையை பயன்படுத்துவோர் ஏராளமாக உள்ளனர். ஆனால், 5 முறைக்கு மேலாக, ஏடிஎம் சேவை பயன்படுத்த, ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதன்படி, மாதத்தில் 5 முறை இலவசமாகவும், அதற்குப் பின் கட்டணத்துடன் ஏடிஎம் சேவை பயன்படுத்த வேண்டும் எனவும் புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி செயல்படுத்தி உள்ளது. இதனை வாபஸ் பெறவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தமிழரசன் தெரிவித்திருந்தார்.

எனினும், இந்த மனு ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு மாறாக உள்ளதாகக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

அடுத்த செய்தி