ஆப்நகரம்

தமிழகப் பள்ளி மாணவர்கள் ஷாக்; புது ஐடியா சொன்ன உயர் நீதிமன்றம்!

உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலில் பள்ளி மாணவர்களும் இடம்பெற்ற விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

Samayam Tamil 8 Oct 2021, 7:57 pm

ஹைலைட்ஸ்:

  • ஒன்பது மாவட்டங்களில் நேற்று அமைதியாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்
  • ஈச்சாங்குப்பம் ஊராட்சி வாக்காளர் பட்டியலில் பள்ளி மாணவர்களும் இடம்பெற்றதால் அதிர்ச்சி
  • ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியலின் அடிப்படையில் வாக்காளர்களை அனுமதிக்க உத்தரவு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil School Students
தமிழகத்தில் விடுபட்டு போன காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 27,791 பதவிகளுக்கு ஒரு லட்சத்து 698 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இவற்றை பரிசீலனை செய்ததை அடுத்து, தேர்தல் களத்தில் 80,819 பேர் உள்ளனர். முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈச்சாங்குப்பம் ஊராட்சிக்கான துணை வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

அதாவது, தகுதியான பலரின் பெயர்கள் நீக்கப்பட்டு பள்ளி மாணவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழரசன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலில் பள்ளி மாணவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. எனவே ஏற்கனவே வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவில் முதலிடம் பிடித்த மாவட்டம்!
உள்ளாட்சி தேர்தல் தொடக்கம்

மேலும் நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கு இந்த தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சத்திகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈச்சாங்குப்பம் ஊராட்சியில் ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் தொடங்கிவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



பள்ளி மாணவர்களுக்கு தடை

இந்நிலையில், முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிவிட்டதால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. இருப்பினும் ஆவணங்களை சரிபார்த்து தகுதியுள்ள அனைவரையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு காலையில் மந்தமாக இருந்தது.
இனி தமிழிலும் அஞ்சல் துறை படிவங்கள்... சாதித்த மதுரை எம்பி!
மதிய நேரத்திற்கு பின்னரே சூடுபிடிக்கத் தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 6 மணி வரை எந்தவொரு அசம்பாவிதமும் இன்றி நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டாம் கட்டத் தேர்தல் வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனுடன் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இருகட்டங்களிலும் பதிவான வாக்குகள் வரும் 12ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

அடுத்த செய்தி