ஆப்நகரம்

கனிமொழி வெற்றிக்கு வந்த ஆப்பு?- பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு கனிமொழி வெற்றி பெற்ற வழக்கில், உரிய பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 5 Sep 2019, 1:49 pm
சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கனிமொழி. இவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை தோல்வியை தழுவினார்.
Samayam Tamil Kanimozhi


இந்நிலையில் கனிமொழி வெற்றிக்கு எதிராக தூத்துக்குடியை சேர்ந்த ஏ.சந்தானகுமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் பல்வேறு விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் போக்ஸோ நீதிமன்றம்..! மூன்று மாவட்டங்களில் அமைக்க உத்தரவு

இதனை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டதும் சட்ட விரோதமானது. எனவே அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அதில் கனிமொழி, இந்திய தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர். இந்த சூழலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

குரங்கணி வனப்பகுதியில் மீண்டும் மலையேற்றம் செல்ல அனுமதி!

இதன் விசாரணையில், வரும் 23ஆம் தேதிக்குள் கனிமொழி மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானா ஆளுநராக பதவியேற்க ரெடி; அதுல தமிழிசைக்கு இப்படியொரு சிக்கல்!

அடுத்த செய்தி