ஆப்நகரம்

சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற நீதிமன்றம் தடை

சிலைக்கடத்தல் தொடா்பான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்து தமிழக அரசு வெளியிட்ட ஆணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Samayam Tamil 7 Aug 2018, 11:53 am
சிலைக்கடத்தல் தொடா்பான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்து தமிழக அரசு வெளியிட்ட ஆணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
Samayam Tamil Chennai Highcourt


சிலைக்கடத்த தொடா்பான வழக்குகளை விசாரிக்க 2017ம் ஆண்டு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையில் சென்னை உயா்நீதிமன்றத்தால் குழு அமைக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து சிலைக்கடத்தல் தொடா்பான வழக்குகள் வேகமெடுத்து சிலைகள் மீட்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் சிலைக்கடத்தல் வழக்கு தொடா்பாக பொன்.மாணிக்கவேல் குழு மேற்கொள்ளும் விசாரணையில் நம்பிக்கை இல்லை, அவா் வழக்கு தொடா்பாக ஒரு வருடமாக தமிழக அரசிற்கு எதுவும் தொிவிக்வில்லை. வழக்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று கூறி இது தொடா்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டது.

இந்த ஆணைக்கு எதிா்ப்பு தொிவித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உயரதிகாரிகளை காப்பாற்றும் நோக்கில் இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஐ.ஜி. தலைமையில் நடைபெற்று வரும் விசாரணை குழுவை அதிரடியாக தமிழக அரசு மாற்றம் செய்ய விரும்புவது ஏன் என்று கேள்வி எழுப்பினாா்.

மேலும், தமிழக அரசின் அரசாணை ஒரு நிமிடம் கூட அமலில் இருக்க அனுமதிக்க முடியாது என்று தொிவித்த நீதிபதி அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளாா். மேலும் அடுத்த விசாரணையின் போது தமிழக அரசும், டிஜிபியும் இது குறித்து விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

அடுத்த செய்தி