ஆப்நகரம்

தெலங்கானாவுக்கு மாறும் ஐ.ஜி பாலியல் வழக்கு- 6 மாதத்தில் பெண் எஸ்.பிக்கு நீதி கிடைக்குமா?

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி மீதான பாலியல் புகார் வழக்கை, தெலங்கானாவுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 28 Aug 2019, 3:28 pm
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக பணியாற்றிய முருகன் மீது, அவருக்கு கீழ் பணியாற்றும் பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் வெளியானதை அடுத்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil Chennai High Court


இதுகுறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டார். ஆனால் அந்த கமிட்டி மாற்றி அமைக்கப்பட்டு, டிஜிபி ஸ்ரீ லட்சுமி பிரசாத் தலைமையில் புதிய கமிட்டி அமைக்கப்பட்டது

ஜெயலலிதா செய்யாத சாதனையை செய்கிறாரா எடப்பாடி!!

இதனைத் தொடர்ந்து முருகன் மீதான புகாரை, சிபிசிஐடி போலீசார் விசாரிக்க விசாகா குழு பரிந்துரை செய்தது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாகா கமிட்டி தொடர்ந்து விசாரிக்கட்டும். அதேசமயம் சிபிசிஐடி போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி சார்பில் உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஐ.ஜி முருகனை தமிழக அமைச்சர்கள் சிலர் காப்பாற்ற முயல்கின்றனர்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் ரூ.5 ஆயிரம் சன்மானம்- புதுச்சேரி அரசு அறிவிப்பு!

எனவே உயர்நீதிமன்ற கண்காணிப்பில் புலன் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. மீதான பாலியல் புகார் வழக்கு தெலங்கானாவுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தெலங்கானா போலீஸுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், அடுத்த 6 மாதத்திற்குள்ளாக தீர்வு கிடைக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அதிகரிக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்!

அடுத்த செய்தி