ஆப்நகரம்

Madras High Court: காந்தியின் நினைவு நாளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை ஒரு நாள் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 29 Jan 2019, 12:15 pm
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை ஒரு நாள் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil TASMAC


மகாத்மா காந்தியின் 72 ஆவது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை ஒரு நாள் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்படும் நிலையில், காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டும் நாளை ஒரு நாள் டாஸ்மாக் கடைகளை மூட உள்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம்சதீஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தங்கள் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளால் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக, அது போன்ற டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனை விசாரித்த ஆதிகேசவன் அமர்வு பொதுவாக காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி அன்று மதுக்கடைகளை விடுமுறை விடப்படும். அப்படியிருக்கும் போது நாளை காந்தியின் நினைவு தினம். அன்றும் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடவேண்டும் என்று உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்புயுள்ளது. தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணையை வரும் பிப்ரவரி 18ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி