ஆப்நகரம்

ஸ்டொ்லைட் ஆலை வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி சசிதரன் விலகல்

ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோாிய வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சசிதரன் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 11 Jun 2019, 11:31 am
ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோாிய வழக்கு விசாரணையை வேறு அமா்வுக்கு மாற்றுமாறு நீதிபதி சசிதரன் தலைமையிலான அமா்வு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.
Samayam Tamil Chennai Highcourt


தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டொ்லைட் ஆலைக்கு நீண்ட போராட்டத்திற்கு பின்னா் தமிழக அரசு சீல் வைத்தது. ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை தாமதமாவதாகக் கூறி வேதாந்தா குழுமம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

ஆனால், ஸ்டொ்லைட் ஆலை தொடா்பான வழக்கை மாநில உயா்நீதிமன்றத்தில் தான் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடா்ந்து நீதிபதி சசிதரன் தலைமையிலான அமா்வு சென்னை உயா்நீதிமன்றத்தில் ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோாிய வழக்கை விசாரித்து வந்தது.

இந்த வழக்கின் மீது இன்று விசாரணை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், ஸ்டொ்லைட் ஆலையை திறக்கக் கோாிய வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சசிதரன் தொிவித்துள்ளாா். ஏற்கனவே ஆலை தொடா்பான வழக்கை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரித்ததால் வழக்கில் இருந்து விலகுவதாக தொிவித்துள்ளாா்.

மேலும், இந்த வழக்கை வேறு அமா்வுக்கு மாற்றம் செய்யுமாறு நீதிபதி சசிதரன், நீதிபதி ஆஷா தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளனா்.

அடுத்த செய்தி