ஆப்நகரம்

அதிகாரிகள் ஏன் இப்படி செய்கிறீர்கள்? பேனர் பலிக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

பேனர்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்களுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 13 Sep 2019, 11:51 am
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ(23) என்ற இளம்பெண், நேற்று பள்ளிக்கரணை சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில், நிலை தடுமாறி சாலையில் சாய்ந்தார்.
Samayam Tamil Chennai High Court


அப்போது அப்பகுதியில் வேகமாக வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி, அப்பெண் மீது ஏறியது. இதில் படுகாயம் அடைந்த சுபஸ்ரீ, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிர் பலி வாங்கும் பேனர் கலாச்சாரம்; இதுக்கு ஒரு முடிவே இல்லையா? கொதிக்கும் மக்கள்!

சாலையோரங்கள், நடைபாதைகளில் சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் விதிமுறைகளை மீறி, பேனர்கள் வைக்கும் வழக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

இதனால் உயிர்பலி ஏற்படும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கோவை ரகுபதியை அடுத்து, தற்போது சென்னை சுபஸ்ரீ என்ற சோகமான நிலைக்கு வந்துள்ளோம். இந்நிலையில் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தை, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இன்று விசாரித்தது.

அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் லாரி மோதி பலி.! சென்னையில் நடந்த சோகம்

இதனை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விதிகளை மீறி பேனர்கள் வைப்பது தொடர் கதையாகி வருகிறது.

பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம். ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன் பிரச்சினை முடிந்து விடுவதாக கருதுகின்றனர். பேனர் வைப்பதும், அதற்கான இழப்பும் அரசியல் ஆக்கப்படுகின்றன என்று நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இளம்பெண் உயிரை பறித்த பேனர்- வசமாக சிக்கிய முன்னாள் கவுன்சிலர், அச்சகம்!

அடுத்த செய்தி