ஆப்நகரம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை யார் நடத்துவது?- உயர் நீதிமன்றம் போட்ட ’பலே’ கண்டிஷன்!

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக போடப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 13 Jan 2020, 1:26 pm
உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரும் 15ஆம் தேதி தைப் பொங்கல் திருநாளில் நடைபெறுகிறது. இதில் அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Samayam Tamil Jallikattu


இதுதொடர்பாக பல்வேறு கட்டப்பேச்சுவார்த்தைகள் நடந்தும் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே இம்முறை ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையாக நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்- தமிழகத்தில் எந்தெந்த தேதிகளில் நடைபெறுகிறது!

இந்த சூழலில் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த கல்யாண சுந்தரம், ராமசாமி உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தும் விழாக் கமிட்டிக்கு தலைமை வகிப்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு குழு தலைவராக இருந்து வருகிறார்.

இவர் கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிப்பது இல்லை. யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தனித்து முடிவுகளை எடுக்கிறார். குடும்ப விழா போல் நடந்து கொள்கிறார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் பங்கேற்க பட்டியலின சமூகத்தினருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

பொங்கலுக்கு எத்தனை நாட்கள், எந்தெந்த நாட்களில் விடுமுறை தெரியுமா?

இதுபோன்ற நிலை தொடர்ந்தால் ஜல்லிக்கட்டை ஒற்றுமையுடன் நடத்தும் நிலை குறையும். இதில் ஈடுபடும் ஆர்வமும், பங்கெடுப்பும் குறைந்துவிடும். எனவே கிராம மக்களின் அனைத்து சமூக பங்கெடுப்புடன் கூடிய விழாக் குழுவை அமைத்து ஜல்லிக்கட்டை நடத்த உத்தரவிட வேண்டும்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவை மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்த வேண்டும்.

பொங்கல் பரிசு வாங்கியாச்சா?- உடனே ரேஷன் கடைக்கு கிளம்புங்க; அப்புறம் வாங்க முடியாது!

மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதேபோன்று அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளை மாவட்ட ஆட்சியர், தென்மண்டல காவல்துறை தலைவர், மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குநர் ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அடுத்த செய்தி