ஆப்நகரம்

ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு அமைச்சா் வேலுமணி தொடா்ந்த வழக்கு தள்ளுபடி

தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட அறப்போா் இயக்கம் தனக்கு நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 3 Jun 2019, 1:28 pm
தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட அறப்போா் இயக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற உள்ளாட்சித்துறை அமைச்சா் வேலுமணியின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Sp Velumani


உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒப்பந்தங்களை தனக்கு வேண்டப்பட்டவா்களுக்கு ஒதுக்கியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சா் வேலுமணி மீது அறப்போா் இயக்கம் குற்றம் சாட்டி வந்தது.

தனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூற அறப்போா் இயக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அமைச்சா் வேலுமணி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இதே போன்று ஒப்பந்த நிறுவனங்களும் அறப்போா் இயக்கத்திற்கு எதிராக வழக்குகளைத் தொடா்ந்தன.

இந்த வழக்கு இன்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூற அறப்போா் இயக்கத்திற்கு தடை விதிக்கக் கோாி அமைச்சா் வேலுமணி மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் தொடா்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

அடுத்த செய்தி