ஆப்நகரம்

இப்படி பெயர் மாற்றம் செய்ய முடியாது- மெட்ராஸ் உயர் நீதிமன்றம் நிராகரிப்பு!

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயரை இவ்வாறு மாற்றம் செய்ய முடியாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Dec 2019, 10:00 am
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் ஒன்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம். இது 1862ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி நிறுவப்பட்டது. தொடக்கத்தில் “சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்” என்று அழைக்கப்பட்டது.
Samayam Tamil Chennai High Court Entrance


அதன் பிறகு உயர் நீதிமன்ற சட்ட வரைவுகள் ஏற்படுத்தப்பட்டு, 1862ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ”மெட்ராஸ் உயர் நீதிமன்றம்” என பெயர் மாற்றம் பெற்றது. மதராஸ் நகரம் “சென்னை” என்று சட்டப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதிலும், பாரம்பரிய பெருமைக்காக “மெட்ராஸ் உயர் நீதிமன்றம்” என்ற பெயரிலேயே தொடர்கிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயரை “தமிழ்நாடு உயர் நீதிமன்றம்” என்றும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை ”தமிழ்நாடு மதுரைக் கிளை” என்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஓய்கிறது பிரச்சாரம்; உள்ளாட்சி தேர்தலுக்காக ஓடி, ஓடி உழைக்கும் அரசியல் கட்சிகள்!

இது பிரதமர் மோடிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயரை ”தமிழ்நாடு உயர் நீதிமன்றம்” என மாற்றம் செய்வது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இதுபற்றி சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது மெட்ராஸ் உயர் நீதிமன்றம் போன்று பம்பாய் உயர் நீதிமன்றம், கல்கத்தா உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றம் செய்யப்படவில்லை என்று சுட்டிக் காட்டப்பட்டது.

லைட்டா காட்டிய சாரல் மழை- தலைநகர் குளிர்ந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

மெட்ராஸ் உயர் நீதிமன்ற அதிகார எல்லையில் தமிழ்நாட்டுடன் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் உள்ளதால் ”தமிழ்நாடு உயர் நீதிமன்றம்” என்று பெயர் மாற்றம் செய்வது முறையாக இருக்காது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை உயர்நீதிமன்றக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. உயர்நீதிமன்றங்களின் பெயர்களை மாற்றுவது, வழக்காடு மொழியை மாற்றுவது ஆகியவை குறித்து உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் கருத்துகளைக் கேட்கத் தேவையில்லை.

மத்திய அரசே நேரடியாக முடிவெடுக்கலாம் என்று நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்கனவே கூறியுள்ளது.

குடியுரிமைச் சட்டத் திருத்தம்: திருப்பி அனுப்பப்பட்ட ஜெர்மனி மாணவர்!

எனவே, உயர்நீதிமன்ற முழு அமர்வின் முடிவை பொருட்படுத்தாமல் சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை ”தமிழ்நாடு உயர்நீதிமன்றம்” என்று மாற்றுவதற்கான சட்டத்திருத்த முன்வரைவை மத்திய அரசு தயாரித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி