ஆப்நகரம்

எஸ்.பி. வேலுமணி ஊழல் புகார்: பெண் பத்திரிகையாளரை மிரட்டும் போக்குக்கு கடும் கண்டனம்

வேலுமணி ஊழலை வெளிப்படுத்திய பெண் பத்திரிக்கையாளரை மிரட்டும் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 9 Sep 2018, 11:38 am
வேலுமணி ஊழலை வெளிப்படுத்திய பெண் பத்திரிக்கையாளரை மிரட்டும் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil sp velumani


இதுகுறித்து சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முக்கிய டெண்டர்களை தனது சகோதரர் மற்றும் நண்பர்களின் நிறுவனங்களுக்கு வழங்கியிருப்பதை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சரின் ஆதரவாளர்கள், இந்த ஊழல் குறித்து சில மாதங்களுக்கு முன்னர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் கோவைப் பதிப்பில் வெளியான செய்தியை எழுதிய பெண் பத்திரிகையாளர் கோமல் கவுதமை ஆபாச வார்த்தைகளால் திட்டியும் மிரட்டல் விடுத்தும் உள்ளனர்.

இதேபோன்று, குட்கா ஊழல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வுபெற்ற காவல் ஆணையர் ஜார்ஜ், செய்தியாளர் சபீரை பார்த்து "நீங்கள் முஸ்லீம்தானே" என சீறியிருக்கிறார்.

மேலும் படிக்க: அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஊழல் : வெளிப்படுத்திய டைம்ஸ் ஆஃப் இந்தியா பெண் பத்திரிகையாளருக்கு மிரட்டல்

ஊழல்கள் அம்பலமாகும்போது செய்தியாளர்களை அச்சுறுத்தி அதனை மறைக்க முயற்சிக்கும் இவர்களின் இந்த அணுகுமுறைக்கு சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (MUJ) கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. ஊடக சுதந்திரத்தையும், பத்திரிகையாளர்களின் உரிமையையும் பறிக்கும் இந்தப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என எம்.யூ.ஜே வலியுறுத்துகிறது.” என பதிவிட்டுள்ளது.

அடுத்த செய்தி