ஆப்நகரம்

ஊரடங்கு நீட்டிப்பு : சென்னை பல்கலைகழகம் முக்கிய அறிவிப்பு!!

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து, பட்டப்படிப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 15 Apr 2020, 9:09 pm
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் முக்கிய முடிவாக, நேற்றுடன் (ஏப்ரல் 14) முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டித்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
Samayam Tamil madras


முன்னதாக, தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

ஊரடங்கு உத்தரவு தொடர்பாக பிரதமர், தமிழக முதல்வர் ஆகியோரின் உத்தரவுகளை தொடர்ந்து, சென்னைப் பல்கலைக்கழகம், அதன் இணைப்புக் கல்லூரிகள் அனைத்திலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள், செய்முறை தேர்வுகள் ஆகியவை ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் நிர்வாகம் அறிவித்துள்ளது. தேர்வு கால புதிய அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பணியாளர்களும் மே மாதம் 3 ஆம் தேதி வரை, வீட்டில் இருந்தபடியே பணியாற்ற வேண்டும் என்றும், தேவைப்படும்பட்சத்தில் அவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும் எனவும் சென்னைப் பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் முன்பே பருவத் தேர்வுகள் (செமஸ்டர்) ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாப் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி