ஆப்நகரம்

“கலெக்ட்ரேட் சித்தர்” அருள்வாக்கு: ஆர்.கே.நகரில் மகாபிரபு தான் ஜெயிப்பார்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மகாபிரபு தான் ஜெயிப்பார் என்று “கலெக்ட்ரேட் சித்தர்” அருள்வாக்கு அளித்துள்ளார்.

TNN 13 Dec 2017, 8:38 pm
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மகாபிரபு தான் ஜெயிப்பார் என்று “கலெக்ட்ரேட் சித்தர்” அருள்வாக்கு அளித்துள்ளார்.
Samayam Tamil madurai collectrare siththar says about rk nagar by election
“கலெக்ட்ரேட் சித்தர்” அருள்வாக்கு: ஆர்.கே.நகரில் மகாபிரபு தான் ஜெயிப்பார்!


மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த மனிதரைச் சுற்றி ஒரே கூட்டம். வழக்கமாக மனு எழுதிக்கொடுப்போர் அமர்கிற இடம் அது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரிலுள்ள பிளாட்பாரத்தில் இருப்பவர் தான் இந்த“கலெக்ட்ரேட் சித்தர்”. இவரது சொந்த ஊர் காரைக்குடி. இவரது உண்மையான பெயர் சிதம்பரம். உங்கள் பெயர் கொண்ட அரசியல்வாதியின் எதிர்காலம் எப்படியிருகும் என்று அந்த சித்தரிடம் கேட்ட போது, அவர் திறமையானவர், அனுபவசாலி. ஆனால், கொஞ்சம் ஆணவக்காரர். இதனாலேயே அவர் ஓரங்கட்டப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், தன்னை விட வயது குறைந்தவர்களிடம் அவர் அவமானப்பட நேரிடலாம் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் அங்கு கூடியிருந்தவர் அருள்வாக்கு கேக்க தொடங்கினர்.

சாமி கடன் தொல்லை தாங்க முடியவில்லை. நீங்க தான் வழி சொல்ல வேண்டும் என்று கண் கலங்கிய பாணியில் முதியவர் ஒருவர் கேட்டார். அதற்கு வானத்தை நோக்கிப் பார்த்து கை விரல்களால் கோலமிட்டபடி சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். அதன் பிறகு, உன்னைப் பிடிச்ச சனி இன்றோடு தொலைந்தது. நேரே வடக்கே பாத்துப் போ. ஒரு மாடு உன்னை பாத்து வரும். அது பசு, காளை, எருமை என்றெல்லாம், பாக்காதே. அப்படியே பிடித்துக்கொண்டு போ, கடன் தணிந்து செல்வம் குவியும் என்றார். சாமி மாட்டுக்காரர் பிரச்சனை ஏதும் செய்வாரா என்று அந்த முதியவர் கேட்க, அதெல்லாம், ஒன்றுமில்லை. நான் சொன்னதை மட்டும் செய் என்றார் அந்த சித்தர்.

அவர் கிளம்பியது, அடுத்து லேடீஸ் பர்ஸ்ட் என்றார் சித்தர். அந்தப் பெண்ணுக்கு தீர்வு சொன்னதும், அடுத்தும் ஒரு பெண் தீர்வு கேட்டார். சாமி என்னுடைய பெயர் கீதா. நான் எதற்கு வந்திருக்கிறேன் என்று மட்டும் சொன்னால் போதும் என்று வித்தியாசமாக அந்தப் பெண் கேட்டார். வழக்கம் போல் வானத்தை பார்த்துக் கொண்டு, ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. உன்னிடம் பணமில்லை அதுதானே? என்று சாமி கேட்டார். அதற்கு அந்தப் பெண், இல்லை சாமி. நான் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்கிறேன். அதில் எனக்கு வேலை கிடைக்குமா என்று தான் கேட்க வந்தேன் என்று சிரித்தபடி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் அந்தப் பெண்.

அதன் பிறகு உள்ளே புகுந்த சிலர், சாமி, இந்த நாட்டில் உள்ள அரசியல் குழப்பம், பிரச்சனை எப்போது தீரும் என்றனர். அதற்கு சாமி, இன்னும் 3 மாசம் தான். அதுக்குப் பிறகு பெரிய மாற்றம் வரும் என்றார். சாமி, ஆர்.கே.நகர் தேர்தலில் யார் ஜெயிப்பா? என்று கேட்க, அதுல யாரெல்லாம் போட்டியிடுறாங்களோ, அவங்க ஜாதகத்த பாத்து தான் சொல்ல முடியும் என்றார். என் கணக்குப் படி பிரபு என்ற பெயர் வச்சவர் தான் ஜெயிக்க வாய்ப்புள்ளது என்றார். ஆனால், அந்த பேருல யாருமில்லையே சாமி என்றனர். அப்படின்னா, மகாபிரபு என்று முன்னாலேயோ அல்லது பின்னாலேயோ அடைமொழி இருக்கலாம் என்றார்.

அடுத்த செய்தி