ஆப்நகரம்

ஸ்டெர்லைட்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலை குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகலை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தவிட்டுள்ளது.

Samayam Tamil 3 Apr 2018, 2:15 pm
மதுரை: ஸ்டெர்லைட் ஆலை குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகலை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தவிட்டுள்ளது.
Samayam Tamil Untitled


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அம்மாவட்ட மக்கள் தொடர்ந்து 51வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகியுள்ளது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகலை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பது கருதி, 2010ஆம் ஆண்டு செப்டம்பரில் சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட உத்திரவிட்டது. இதன் மேல்முறையீட்டு வழக்கில் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த ஆலையை நம்பி வாழ்வதால் ஆலைக்குத் தடைவிதிக்க முடியாது என்று கூறி உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.

ஆனால், தூத்த்துகுடி அருகே உள்ள கடல், தீவுகள் மற்றும் தேசிய கடல் பூங்கா ஆகியவை பாதிக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் கருதினால், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் தமிழக அரசும் இணைந்து ஆலையை மூடுவதைப் பற்றி முடிவுசெய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

இந்தத் தீர்ப்பின் நகலையே தமிழக அரசிடம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேட்டிருக்கிறது.

அடுத்த செய்தி