ஆப்நகரம்

ஸ்டெர்லைட் போராட்டம்: 1720 பேர் மீதான வழக்கு ரத்து

தூத்துக்குடி துப்பாக்கிச்சுடுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போரட்டத்தில் கலந்துகொண்ட 1720 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Samayam Tamil 21 Jun 2018, 5:51 pm
தூத்துக்குடி துப்பாக்கிச்சுடுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போரட்டத்தில் கலந்துகொண்ட 1720 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
Samayam Tamil MA13STERLITE


தூத்துக்குடி சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் கடந்த மே 22ம்தேதி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு, தடியடி நடத்தியதில் 13 பேர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் வன்முறைக்கு காரணமாக இருந்ததாக கூறி மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் மு. க ஸ்டாலின், வைகோ , கமல் , ரஜினி போன்ற அரசியல் தலைவர்களும் , பிரபலங்களும் வந்து காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இந்தநிலையில், தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தாகாரத்மற்றும் சமூக ஆர்வலர் மேதா பட்கர் வந்திருந்தார். அவர்கள் மக்களைச் சந்தித்த பிறகு, காவல்துறையினருக்குஎதிராக பொதுக்கூட்டங்களை நடத்தினர். இதனால் பிருந்தாகாரத், மேதா பட்கர் உள்ளிட்ட 1720 பேர் மீது தூத்துக்குடிகாவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அடுத்த செய்தி