ஆப்நகரம்

10th public exam: அரசின் கொள்கை முடிவு... நாங்கள் தலையிட முடியாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை

10ஆம் வகுப்பு தேர்வு குறித்த அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 3 Jun 2020, 1:01 pm
10 ஆம் வகுப்புக்கு தேர்வு நடத்துவது அரசின் கொள்கை முடிவு என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
Samayam Tamil madurai-high-court


10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது தமிழக அரசு. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் எனப் பல்ரும் எதிர்த்து வந்தபோதும் தேர்வு நடத்தியே தீருவது என்ற முடிவில் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், தேர்வு நடத்துவது தொடர்பான முடிவு அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டவற்றுள் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளும் ஒன்று. ஏறக்குறைய 3 மாத கால ஊரடங்குக்குப் பிறகு, நிலைமை மீண்டும் இயல்புக்கு வருவதாக அரசு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், அந்தத் தேர்வுகளை மீண்டும் நடத்த கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளிக்கல்வித்துறை முயற்சித்து வருகிறது. ஆனால், தொடர்ந்து இதனை மாணவ்ர்களும் பெற்றோர்களும் எதிர்த்து வந்ததால், மீண்டும் ஜூலை மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கனகராஜ் என்பவர் ஒரு பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “ கொரோனா ஊரடங்கு முழுவதுமாக முடிந்த பின்னர் தேர்வு வைப்பதுதான் சரியாக இருக்கும் என்றும், இந்தக் கொரோனா பாதிப்புடன் 3 மணி மாஸ்க் அணிந்தபடி தேர்வு எழுதுவது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “உண்மையில், பொதுதேர்வு நடத்தாமல் இருந்தால்தான் மன உளைச்சல் ஏற்படும். தமிழ்நாடு அரசு வழிகாட்டு விதிகளைக் கருத்தில்கொண்டுதான் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தது.

மேலும் உச்சபட்சமாக “இது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்றும் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதுவரையிலான வழக்குகளில் அரசின் கொள்கை முடிவு என்று நீதிமன்றம் கைவிரித்த வழக்குகள் போலவே இனி பொதுத்தேர்வு விவகாரத்திலும் இந்த உத்தரவு ஒரு திருப்பமாகவும் முக்கிய அம்சமாகவும் இனி அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி