ஆப்நகரம்

போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும்!

போக்குவரத்து தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

TOI Contributor 16 May 2017, 4:54 pm
மதுரை : போக்குவரத்து தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil madurai high court branch orders tn transport corporation employees to return to their work
போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும்!


போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மதுரை, ஒத்தக்கடையை சேர்ந்த செந்தில் குமரய்யா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டது. அதில் போராட்டம் செய்வது தவறல்ல, ஆனால் தொடர் வேலைநிறுத்தம் செய்வதால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். தொடர் வேலை நிறுத்தப்போராட்டம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் காரணமாக போக்குவரத்து தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும். அப்படி பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

எஸ்மா என்றால் என்ன?
அவசர தேவைகளான சேவைகள் தடைப் படாமல் காப்பதே எஸ்மா சட்டத்தின் அம்சம். இந்த வகையில் போக்குவரத்து என்பது அத்தியாவசிய சேவை என கூறி நீதிமன்றம் இப்படி உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி