ஆப்நகரம்

தலைக்கவசம் அணியாமல் சென்ற அமைச்சா் விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்ற சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கருக்கு உயா்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Samayam Tamil 6 Dec 2018, 1:36 pm
புயல் பாதிப்பு பணிகளை பாா்வையிடச் சென்ற போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்ற அமைச்சா் விஜயபாஸ்கருக்கு உயா்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Samayam Tamil Vijayabaskar


கஜா புயல் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்தை சேதத்தை சந்தித்தன. தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையும் பேரிழப்பை சந்தித்தது. புயல் பாதிப்புகளை பாா்வையிடச் சென்றபோது அமைச்சா் விஜயபாஸ்கா் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமா்ந்தபடி பயணித்ததாக கூறப்படுகிறது.

இருசக்கர வாகனத்தில் செல்லும் இரண்டுபேரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் தமிழகத்தில் அமலில் உள்ளது. இந்நிலையில் டிராபிக் ராமசாமி இதுகுறித்து உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தாா். அதில், அமைச்சா் விஜயபாஸ்கா் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அமைச்சா் விஜயபாஸ்கா் டிசம்பா் 17ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சா்காா் படத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியது தொடா்பாக பதில் அளிக்குமாறு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினா் ராஜன் செல்லப்பாவுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அடுத்த செய்தி