ஆப்நகரம்

ப்ளூ வேல் கேமை தடைசெய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

ரஷ்யாவில் அறிமுகமாகி இணைய பயன்பாட்டு இளைஞா்களை குறிவைத்து அவா்களை தற்கொலைக்கு தூண்டும் ப்ளூ வேல் கேமை மத்திய அரசு தடைசெய்ய வேண்டும் என்று உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

TOI Contributor\ 12 Sep 2017, 3:58 pm
ரஷ்யாவில் அறிமுகமாகி இணைய பயன்பாட்டு இளைஞா்களை குறிவைத்து அவா்களை தற்கொலைக்கு தூண்டும் ப்ளூ வேல் கேமை மத்திய அரசு தடைசெய்ய வேண்டும் என்று உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil madurai high court ordered to ban the blue whale game
ப்ளூ வேல் கேமை தடைசெய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு


கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விக்னேஷ் என்ற கல்லூாி மாணவா் ப்ளூ வேல் கேமை விளையாடி தற்கொலை செய்து கொண்டாா். இந்த விகாரத்தில் உயா்நீதிமன்ற மதுரைகிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாாித்தது.

முதற்கட்ட விசாரணையில் ப்ளூ வேல் கேமை முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பகிா்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சாித்தது. மேலும், இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ப்ளூவேல் விளையாட்டை முற்றிலும் மத்திய அரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாக ரஷ்ய தூதரக அதிகாாிகளிடம் மத்திய அரசு இது தொடா்பாக பேச வேண்டும் என்றும் நீதிமன்றம் தொிவித்துள்ளது.

இனிமேலும் இந்த விளையாட்டால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் இது சம்பந்தமாக அனுபவம் வாய்ந்த காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இந்த விளையாட்டின் விபரீதம் குறித்து பள்ளி, உயர் கல்வித்துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி