ஆப்நகரம்

கிருஷ்ணசாமி மீதான போலி ஜாதி சான்றிதழ் வழக்கு; தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அவரது மகன், மகளும் போலி ஜாதி சான்றிதழ் பெற்றுள்ளதாகக் கூறி அதனை ரத்து செய்யக் கோரிய வழக்கினைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 24 Apr 2019, 8:45 pm
நெல்லையைச் சேர்ந்த சிவஜெயப்பிரகாஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
Samayam Tamil Krishnasamy PTK


அதில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் என்று போலி ஜாதி சான்றிதழ் பெற்றுள்ளார். இந்த சான்றிதழின் அடிப்படையில் ஓட்டபிடாரம் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார்.

கிருஷ்ணசாமியின் மகன், மகளும் போலி ஜாதி சான்றிதழ் பெற்றுள்ளனர். இதனால் அவர்களின் ஜாதி சான்றிதழ்களை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, டாக்டர் கிருஷ்ணசாமி தரப்பில் இதே கோரிக்கையுடன் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அந்த விபரங்களை மறைத்து பல ஆண்டுகள் கழித்து மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி