ஆப்நகரம்

மதுரையை பாரம்பரிய நகரமாக அறிவிக்க சு.வெங்கடேசன் வலியுறுத்தல்!!

மதுரையை வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இன்று மக்களவையில் மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் பேசினார்.

Samayam Tamil 1 Jul 2019, 5:22 pm
மக்களவையில் தனது உரையை முதன் முதலாக மதுரை மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன் பதிவு செய்தார்.
Samayam Tamil Su V


அப்போது, ''மதுரை வரலாற்றுப் பாரம்பரியமிக்க நகரம். இதை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். மதுரை வெறும் நகரம் மட்டுமல்ல. தமிழ்ப்பண்பாட்டின் தலைநகரம் . திராவிட நாகரீகத்தின் தாயகம். உலகிலேயே 2000 ஆண்டுகளுக்கும் முந்தைய வரலாற்றை ஏந்தி இன்றும் வாழும் நகரமாக மதுரை விளங்கி வருவதுதான் அதன் சிறப்பு.

மதுரைக்கு அருகில் கீழடியில் சமீபத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் 2300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட எண்ணற்ற பொருட்களும் அன்றைய நாகரீகத்தின் சான்றுகளும் கிடைத்துள்ளன. இதில் 15,000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் நமது நாகரீகத்தின் சான்றை உலகத்திற்கு பறைசாற்றியுள்ளன.

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துக்கள் 20 கி.மீ., சுற்றளவில் 12 இடங்களில் கிடைக்கும் ஒரே உலக நகரமாக மதுரை இருப்பது அந்த நகரத்தின் சிறப்பாகும். இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட மதுரையை உலக பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.

அடுத்த செய்தி