ஆப்நகரம்

வாசலில் கோலமிட்டு மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மதுரை மக்கள்

பிரதமர் மோடியின் தமிழக வருகை பாஜக தொண்டர்கள் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை அளித்திருந்தாலும், அதற்கு இணையான அளவில் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

Samayam Tamil 27 Jan 2019, 4:30 pm
பிரதமர் மோடியின் தமிழக வருகை பாஜக தொண்டர்கள் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை அளித்திருந்தாலும், அதற்கு இணையான அளவில் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
Samayam Tamil கோலம்போட்டு மோடி வருகைக்கு மக்கள் எதிர்ப்பு


அதில் ஒன்று தான் #GoBackModi என்கிற ஹேஷ்டேக். மோடியின் தமிழக வருகையை எதிர்த்து, இந்த ஹேஷ்டேக் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கானது. தற்போதைய நேரத்தில் கூட இந்தியளவில் டிரென்டிங்காக உள்ளது.

விவசாயிகள் பிரச்சனை, நீட் பிரச்சனை என பல்வேறு சமூக பிரச்சனைகளில் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது மத்திய அரசாங்கம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க கூட பிரதமர் மோடி வரவில்லை.

இந்நிலையில் மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவரும் பிரதமருக்கு தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். Gobackmodi என்ற ஹாஸ்டாக்கின் மூலம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

கார்டூன்கள், மீம்கள் என சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படுகிறது. அதேபோல் கருப்பு கொடி காட்டியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மதுரையில் சிலர் தங்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு #Gobackmodi என தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி