ஆப்நகரம்

40வது ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடும் மதுரையின் பெருமைமிகு வைகை எக்ஸ்பிரஸ்!

வைகை எக்ஸ்பிரஸ் தனது 40வது ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

Samayam Tamil 16 Aug 2018, 3:51 pm
மதுரை: வைகை எக்ஸ்பிரஸ் தனது 40வது ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
Samayam Tamil Vaigai Express


மதுரையின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாக வைகை எக்ஸ்பிரஸ் திகழ்கிறது. கடந்த 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்பட்டது. மீட்டர் கேஜ் பாதையில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு பயணத்தைத் தொடங்கியது.

இதனை இயக்க ஓட்டுநர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் பெட்டிகள் சிவப்பு, மஞ்சள் நிறத்தில் இருக்கும். பகலில் இயக்கப்பட்டு வந்ததால், இருக்கை வசதிகள் மட்டுமே காணப்பட்டது. 70களில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்பவர்கள் வைகை எக்ஸ்பிரஸை அதிகம் நாடினர்.

அப்போது மீட்டர் கேஜ் ரயில்கள் மட்டுமே இருந்ததால், நீண்ட நேரம் பயணிக்க நேர்ந்தது. இதற்கு தீர்வளிக்கும் வகையில், அதிவிரைவு ரயிலாக வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகமானது. தெற்கு ரயில்வேயில் முதன் முதலில் நவீன ஜன்னல், கண்ணாடி ஜன்னல், டியூப் லைட் உள்ளிட்டவை வைகை எக்ஸ்பிரஸில் தான் இடம்பெற்றன.

இந்த நிலையில் வைகை எக்ஸ்பிரஸ் இன்று தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. தென்மாவட்டங்களை சென்னையுடன் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது.

புதிதாக ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், வைகை எக்ஸ்பிரஸின் மவுசு ஒருபோதும் குறைவதில்லை. ஏழைகளின் ரதம் என்று அன்போடு அழைத்து, வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பொதுமக்கள் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

Madurai's Vaigai Express celebrates 40th year anniversary.

அடுத்த செய்தி