ஆப்நகரம்

'தீரன்’ படத்தைப் போன்ற நிஜ சம்பவம்; மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராஜஸ்தானில் சுட்டுக் கொலை!

கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் சென்றிருந்த நிலையில், மதுரவாயல் காவல் ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

TNN 13 Dec 2017, 3:31 pm
சென்னை: கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் சென்றிருந்த நிலையில், மதுரவாயல் காவல் ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Samayam Tamil maduravoyal police inspector was shot dead in rajasthan
'தீரன்’ படத்தைப் போன்ற நிஜ சம்பவம்; மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராஜஸ்தானில் சுட்டுக் கொலை!


சென்னை கொளத்தூர் புதிய லட்சுமிபுரத்தில் முகேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது.

இங்கு கடந்த நவம்பர் 16ஆம் தேதி, மேற்புற விடுதி அறையில் இருந்து துளையிட்டு, 3.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சென்ராம், கோலாராம், சங்கர்லால், தவ்ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய நாதுராம், தினேஷ் சௌத்ரி ஆகியோரை பிடிக்க, மதுரவாயல் சட்டம், ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி தலைமையிலான குழுவினர் ராஜஸ்தான் விரைந்தார்.

அங்கு கொள்ளையர்களை பிடிக்கும் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெரிய பாண்டி உயிரிழந்தார். மேலும் கொளத்தூர் காவல் நிலைய சட்டம், ஒழுங்கு ஆய்வாளர் முனிசேகர் காயமடைந்தார்.

இந்நிலையில் சென்னை மேற்கு காவல் இணை ஆணையர் சந்தோஷ் ராஜஸ்தானிற்கு செல்கிறார்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ராஜஸ்தான் காவல்துறையினர் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Maduravoyal Police inspector was shot dead in Rajasthan.

அடுத்த செய்தி