ஆப்நகரம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி நடனம் ஆடி கின்னஸ் சாதனை!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10 ஆயிரம் நாட்டியாஞ்சலி கலைஞர்கள் நடனம் ஆடி கின்னஸ் சாதனை படைத்தனர்.

Samayam Tamil 3 Mar 2019, 1:06 pm
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10 ஆயிரம் நாட்டியாஞ்சலி கலைஞர்கள் நடனம் ஆடி கின்னஸ் சாதனை படைத்தனர்.
Samayam Tamil நாட்டியாஞ்சலி
நாட்டியாஞ்சலி


சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு மஹா சிவாரத்திரி நாளை வருவதை முன்னிட்டு, நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் மற்றும் சுற்றுப் பிரகாரத்தில் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. இந்தாண்டு கின்னஸ் சாதனைக்காக சிறுமிகள், மாணவிகள் உட்பட 10 ஆயிரம் நாட்டியாஞ்சலி கலைஞர்கள் ஒரே நேரத்தில் நடனம் ஆடினர்.
சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த பிரம்மாண்ட நாட்டியாஞ்சலி நடனத்தை, லண்டனில் இருந்து வந்திருந்த கின்னஸ் அதிகாரிகள் வியந்து பார்த்தனர். இதனை பதிவு செய்த அதிகாரிகள் விழாவின் இறுதியில் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் மற்றும் கேடயம் விழா குழுவினருக்கு வழங்கப்பட்டது.
சிவராத்திரியை முன்னிட்டு நாளை முதல் 8ம் தேதி வரையில், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு நாட்டியக் கலைஞர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் நடனத்தை நடராஜருக்கு அர்ப்பணிக்கின்றனர்.

அடுத்த செய்தி