ஆப்நகரம்

தமிழகத்தின் பல்வேறு காடுகளில் தீ - அடுத்தடுத்த தீ விபத்துகளால் பீதியில் மக்கள்

கோடை காலத்திற்கு முன்பாகவே கொளுத்தும் வெயில் ஆரம்பித்து விட்டது. நேற்று பெங்களூரு விமான சாகச கண்காட்சி நடைப்பெற்ற இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 200க்கும் அதிகமான வாகனங்கள் தீயில் கருகியது.

Samayam Tamil 24 Feb 2019, 12:00 pm
கோடை காலத்திற்கு முன்பாகவே கொளுத்தும் வெயில் ஆரம்பித்து விட்டது. நேற்று பெங்களூரு விமான சாகச கண்காட்சி நடைப்பெற்ற இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 200க்கும் அதிகமான வாகனங்கள் தீயில் கருகியது.
Samayam Tamil forest fire

இந்நிலையில் முதுமலை புலிகள் வனக்காப்பக பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. கர்நாடக பகுதியி லேற்பட்ட இந்த தமிழக வனப்பகுதிக்கு பரவாமல் தடுக்க கர்நாடக வன காவலர்களுடன், தமிழக காவலர்களும் இணைந்து தீயை அணைக்க கடுமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது ஒரு புறம் இருக்க கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டுத் தீ பரவியுள்ளது.கொடைக்கானல் பெருமாள்மலை அருகே பேத்துப்பாறை மற்றும் நாயுடுபுரம், சின்னப்பள்ளம், பாத்திமா மலை, குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்தது. நேற்று முன்தினம் வனத்துறையினர் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பல ஏக்கர் அரிய மரங்கள், புல்வெளிகள் எரிந்து சாம்பலாகின.
அதே போல் சேலம் ஏற்காடு மலையில் காட்டுத் தீ ஏற்பட்டுளது.

அடுத்த செய்தி