ஆப்நகரம்

எம்ஜிஆர் செஞ்சத நீங்க செய்விங்களா? அதிமுகவுக்கு கமல் சவால்!

ஊழல் செய்த அமைச்சர்களை எம்ஜிஆர் டிஸ்மிஸ் செய்ததை போல தற்போது டிஸ்மிஸ் செய்ய

Samayam Tamil 27 Dec 2020, 11:28 pm
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஈபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. அப்போது முதல் தமிழகத்தில் அம்மா ஆட்சி நடைபெறுவதாக முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை தொடர்ந்து கூறி வருகின்றனர்.
Samayam Tamil Kamal Hassan


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கைகளில் ‘அம்மா அரசு’ என்பதை பிள்ளையார் சுழி போல குறிப்பிட்டு தொடங்குவது வழக்கம். அதிமுகவை தொடங்கியது எம்ஜிஆராக இருந்தாலும், எல்லா இடங்களிலும் அம்மா ஆட்சி நடைபெறுவதாக கூறிவருவதால், அதிமுக தலைமை எம்ஜிஆரை மறந்துவிட்டது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைவோம்: சிவ சேனா அழைப்பு!
இன்றளவிலும் எம்ஜிஆர் பெயருக்காக அதிமுகவுக்கு கணிசமான வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட கமல்ஹாசன், தான் எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன் என்று பெருமையாக கூறினார். இதைத்தொடர்ந்து, அதிமுக பிரச்சார மேடைகளில் எம்ஜிஆர் பெயரும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

இன்று நடைபெற்ற பிரச்சாரத்திலும் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் எம்ஜிஆர் பற்றி புகழ்ந்து பேசினார்கள். இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில், “இதுகாறும் 'அம்மா ஆட்சி' என்றே முழங்கிக்கொண்டிருந்தவர்கள் மீண்டும் புரட்சித் தலைவரின் பெயரைப் புழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். மகிழ்ச்சி.

தடா போட்ட டாக்டர்கள்: கட்சி குறித்து ரஜினி புது முடிவு
எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கும் முன்னரே, அவரவர் குவித்த சொத்துக்களுக்கு கணக்கு காட்டச் சொன்னவர் வாத்யார். காட்டுவீர்களா? ஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்ஜிஆர். ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா?” என்று சவால் விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி