ஆப்நகரம்

கங்கையில் மிதக்கும் பிணங்கள்.. கமல்ஹாசன் காட்டம்!

கங்கையில் பிணங்கள் மிதந்து வருவது குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் சாடியுள்ளார்.

Samayam Tamil 12 May 2021, 5:45 pm

ஹைலைட்ஸ்:

  • கங்கையில் மிதக்கும் பிணங்கள்
  • மநீம தலைவர் கமல்ஹாசன் சாடல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil kamal haasan
பீஹார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தில் கங்கை நதியில் பல சடலங்கள் மிதந்து வந்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக இந்த பிணங்கள் கங்கையில் தள்ளிவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த பிணங்கள் உத்தரப் பிரதேசத்தில் இருந்து கங்கை நதியில் அடித்து வரப்பட்டதாக பீஹார் அரசு தெரிவித்துள்ளது. மொத்தம் 71 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து சடலங்களுக்கும் இறுதி சடங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பீஹார் அரசு தெரிவித்துள்ளது.

கங்கை நதியில் பிணங்கள் மிதந்து வந்தது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளனர். இந்நிலையில், மக்களையும் காக்கவில்லை, நதிகளையும் காக்கவில்லை என மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சாடியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஆற்றில் மிதந்து வந்த 71 சடலங்கள்!
கமல்ஹாசன் ட்விட்டரில், “ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்ட ‘நமாமி கங்கா’வில் கொரோனாவால் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன. மக்களையும் காக்கவில்லை. நதிகளையும் காக்கவில்லை. ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் பரிதாபமாகக் கலைகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி