ஆப்நகரம்

மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு? மநீம எழுப்பும் கேள்வி!

மகளிர் உரிமைத் தொகை விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Jul 2022, 3:23 pm
திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள வாக்குறுதிகளும் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்றும் திமுக அமைச்சர்கள் அவ்வப்போது கூறிவருகின்றனர்.
Samayam Tamil family women heads cash


தேர்தல் சமயத்தில் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வாக்குறுதி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்புதான். நிதி நிலைமையை காரணம் காட்டி தொடர்ந்து அந்த திட்டம் தள்ளிப்போய் வருகிறது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ''மக்கள் நீதி மய்யம் முதலில் முன்வைத்த மகளிர் உரிமைத் தொகையானது திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றது.

எடப்பாடியை புறக்கணிக்கும் டெல்லி? படுத்துகிட்டே ஜெயித்தாரா ஓபிஎஸ்?

கடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றார் முதல்வர்.

ஆட்சிக்கு வந்தபின்னர், ''...அனைவருக்கும் வழங்க முடியாது; உரிமைத் தொகை பெறத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து வழங்குவோம்'' என்றார் நிதியமைச்சர்.

கடந்த பட்ஜெட்டின்போது, நிதிநிலைமை சரியானதும் வழங்கப்படும் என்று புது நிலைப்பாடு எடுத்தார் நிதியமைச்சர்.
o panneerselvam ஓபிஎஸ் நடத்தும் போட்டி பொதுக்குழு: பின்னணி என்ன?
தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து விவாதிக்க முதல்வர், நிதியமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள சூழலில் 'மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மக்கள் வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

அடுத்த செய்தி