ஆப்நகரம்

இதுல தான் சாதனை படைப்பீங்களா? தமிழக அரசை விமர்சிக்கும் கமல்

கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருப்பது தொடர்பாக கமல்ஹாசன் அரசை விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 14 May 2020, 9:52 am
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சரோ தமிழ்நாட்டில் கொரோனா அதிகளவில் பரவ கோயம்பேடு வியாபாரிகள் தான் காரணம் என கூறியுள்ளார்.
Samayam Tamil தமிழக அரசை விமர்சிக்கும் கமல்


டாஸ்மாக் திறப்பு, அதற்கு அரசு எடுத்த முன்னேற்பாடுகள், காவல் துறையினரை காவலுக்கு வைத்தது, உயர் நீதிமன்றம் தடை விதித்ததும் உச்ச நீதிமன்றம் சென்றது என தமிழ்நாடு அரசு இதில் காட்டிய அக்கறையை கோயம்பேட்டில் காய்கறி வாங்க வருபவர்களிடம் காட்டியிருந்தால் கொரோனா தமிழ்நாட்டில் கட்டுக்குள் வந்திருக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

சென்னை கோயம்பேடு மூலமாக பாதிப்பு குறைவாக இருந்த வட மாவட்டங்கள் முழுவதும் தற்போது அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தமிழ்நாடு அரசை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜாடிக்கு ஏற்ற மூடி; எடப்பாடிக்கு ஏற்ற? டி.ஆர்.பாலு இப்படியொரு கண்டன அறிக்கை!

கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருப்பதை கமல்ஹாசன் தனது பதிவில் சுட்டிக் காட்டியுள்ளார். “முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது. கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது. காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு” என பதிவிட்டுள்ளதுடன் தாங்குமா தமிழகம் என ஹேஸ்டேக் போட்டுள்ளார்.

மோடியிடம் இந்த கேள்விக்கு பதில் இருக்கா ? திருமா காட்டம்!



தமிழ்நாட்டில் தற்போது 9 ஆயிரத்து 227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து 176 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக நடிகர் ரஜினிகாந்தும் அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று கூறியிருந்தார்.

அடுத்த செய்தி