ஆப்நகரம்

ஆச்சரிய ’என்ட்ரி’; அதிருப்தி பின்னணி- கட்சியில் கமலின் அடுத்த ஆபரேஷன் என்ன தெரியுமா!

திரைப்படங்களில் சர்ச்சை நாயகனாக திகழும் கமல் ஹாசன், தான் தொடங்கிய அரசியல் கட்சியிலும் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறார்.

Samayam Tamil 21 Aug 2019, 4:12 pm
தமிழ் திரையுலகில் 50 ஆண்டுகள் என்ற அசாத்திய பயணத்தை நிகழ்த்திக் காட்டியவர் நடிகர் கமல் ஹாசன். இவர் ரஜினிகாந்திற்கு முன்பாக அதிரடியாக அரசியல் களத்தில் இறங்கினார். ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கி, விறுவிறுப்பாக காய்களை நகர்த்தி வருகிறார்.
Samayam Tamil Kamal Haasan


கடந்த மக்களவை தேர்தலில் இக்கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எந்தவொரு தொகுதியிலும் வெற்றி பெறாத சூழலிலும், நகர்ப்புறங்களில் பொதுமக்களின் ஆதரவை ஓரளவு பெற்றிருக்கிறார். இதற்கு அவரது கட்சியினர் பெற்ற வாக்குகளே சான்றாகும்.

Also Read: அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த அரக்கன் இலங்கை ராணுவ தலைமைத் தளபதியா? வைகோ கண்டனம்!

வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிக் கனிகளைப் பறிக்க, கமல் ஹாசன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதற்காக கார்ப்பரேட் அரசியல் வித்தகர் என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளைப் பெற்று செயல்படுகிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளரையும் கட்சியின் பொறுப்பாளர்கள் சந்திக்க வேண்டும். இதற்காக புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட உள்ளன.

Also Read: பாஜகவினரைப் போல் பொத்தாம் பொதுவாக பேச முடியாது; அதுக்குத் தான் இப்படி - ஸ்டாலின் விளக்கம்!

இதையொட்டி 6 பொதுச் செயலாளர்கள் அடங்கிய பட்டியல் முதலில் வெளியிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. அதில் ஐபிஎஸ் அதிகாரி மவுரியா, ஐஏஎஸ் அதிகாரி பஷீர் அகமது உள்ளிட்டோருக்கு பதவிகள் வழங்கப்பட்டன.

ஆனால் ஸ்ரீபிரியா, கோவை சரளா ஆகியோருக்கு எந்தவித பொறுப்புகளும் வழங்கப்பட வில்லை. ஏனெனில் அவர்களின் செயல்பாடுகள் கமல் ஹாசனுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Also Read: நான் வெளிநாடு கிளம்பறேன்; இனி இவர் தான் எல்லாம்... ஓபிஎஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈபிஎஸ்!

எனவே அருப்புக்கோட்டையை சேர்ந்த உமாதேவி என்பவரை புதிதாக களமிறக்கி, அவருக்கு பொதுச் செயலாளர் பதவி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பெண்கள் முன்னேற்றம் குறித்து சில கருத்துகளை தலைமைக்கு அனுப்பி இருந்தேன்.

அதன் அடிப்படையில் எனக்கு இத்தகைய பதவியை வழங்கியிருக்கலாம் என்று குறிப்பிட்டார். வரும் நாட்களில் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட கமல் ஹாசன் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் புதிய ஆபரேஷன் ஒன்றில் கமல் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு “ஆபரேஷன் 500” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் நோக்கம் வரும் சட்டமன்ற தேர்தலில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக மக்கள் நீதி மய்யம் விளங்க வேண்டும். அதற்காக முழு உழைப்பை செலுத்த வேண்டும் என்பதே ஆகும். கமல் ஹாசனின் அரசியல் அதிரடிகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி