ஆப்நகரம்

ஆத்தா எங்ககிட்டேயும் ஆதாரம் இருக்கு: கொஞ்சம் பாத்து பேசுங்க! மக்கள் நீதி மய்யம்!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இணைந்தததற்கு ஆதாரம் இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 13 Mar 2018, 11:04 pm
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இணைந்தததற்கு ஆதாரம் இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil makkal needhi maiam party reply to tamilnadu bjp leader tamilisai who joined in kamals party
ஆத்தா எங்ககிட்டேயும் ஆதாரம் இருக்கு: கொஞ்சம் பாத்து பேசுங்க! மக்கள் நீதி மய்யம்!


நடிகா் கமல்ஹாசன் கடந்த மாதம் 21ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். இதைத்தொடா்ந்து கட்சியில் உறுப்பினா் சோ்க்கைக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவரான தமிழிசை சௌந்தர ராஜன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தான் சேர்ந்துவிட்டதாகவும் எனக்கு இ-மெயில் அனுப்பி இருக்கிறார்கள். தமிழக பாஜக தலைவராக இருக்கும் நான் கமல்ஹாசனின் கட்சியில் இணைவேனா? உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் கிடைக்கும் இ-மெயில் முகவரியைக் கொண்டு கமல் கட்சியினர் இது போன்று இ-மெயில் அனுப்புகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார்.



Welcome to Makkal Needhi Maiam ma’am. We also have a photo, just like the one you released today. Just that we are blurring out your number. Don’t want the world calling you to ask how you registered for MNM. (Part-I) pic.twitter.com/mGCJFzzoeY — Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 13, 2018 By the way, we also have a deregistering option, just incase this has embarrassed you in front of your party. We wouldn’t want that for you. But for the time being, Welcome to #MakkalNeedhiMaiam (Part-II) pic.twitter.com/ZaoA7FpmBW — Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 13, 2018 இதற்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே ...நீங்கள் காட்டியது போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா? ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே ...நீங்கள் காட்டியது போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா ? (Part-I) pic.twitter.com/JoyGrx44CO — Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 13, 2018 ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது . அதுவரை ... பதிவு செய்தமைக்கு நன்றி (Part-II) pic.twitter.com/zlJh6Chll7 — Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 13, 2018

அடுத்த செய்தி