ஆப்நகரம்

மாமல்லபுரத்தில் உள்வாங்கியது கடல்: மகிஷாசூரமர்த்தினி கோயிலை காணலாம்!!

மாமல்லபுரத்தில் கடல் உள்வாங்கி நீரில் மூழ்கி இருந்த மகிஷாசூரமர்த்தினி கோயில் தற்போது நன்றாக தெரிவதால் சுற்றுலாப் பயணிகள் சந்தோசம் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 20 Sep 2018, 4:35 pm
மாமல்லபுரத்தில் கடல் உள்வாங்கி நீரில் மூழ்கி இருந்த மகிஷாசூரமர்த்தினி கோயில் தற்போது நன்றாக தெரிவதால் சுற்றுலாப் பயணிகள் சந்தோசம் அடைந்துள்ளனர்.
Samayam Tamil மகிஷாசூரமர்த்தினி கோயிலை காணலாம்!!
மகிஷாசூரமர்த்தினி கோயிலை காணலாம்!!


பிரசித்தி பெற்ற உலக சுற்றுலா தளங்களில் முக்கியமானது மட்டுமின்றி, சிற்பக் கலைகளுக்கு பெயர் பெற்றது மாமல்லபுரம் என்ற மகாபலிபுரம். இங்குள்ள கற்களால் ஆன சிற்பங்களைக் காண உலகளவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இங்குள்ள கடல் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அப்போது கடல் உள்வாங்கும். இந்த சம்பவம் தற்போது ஏற்பட்டுள்ளது. சுமார் 200 மீட்டர் அளவிற்கு கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் கடலில் மூழ்கி இருந்த மகிஷாசுரமர்த்தினி கோயில் சிற்பங்கள் தற்போது நன்றாக வெளியே தெரிகிறது.

இதுமட்டுமின்றி பல்வேறு சிற்பங்கள் தெரிவதால் அந்த சிற்பங்களை பாதுகாக்கும் வகையில், சிற்பங்கள் மீது ரசாயன கலவை பூசும் பணியை தொல்லியல் துறை மேற்கொண்டுள்ளது.

மகிஷாசூரமர்த்தினி கோயில் நன்றாக தெரிவதால், சிற்பத்தை அருகில் சென்று பார்க்க மக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஆதலால், சிற்பத்தை அருகில் சென்று காணும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி