ஆப்நகரம்

பணம் மாற்றச் சென்றவர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சென்றவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுதியுள்ளது.

TNN 13 Nov 2016, 6:49 pm
கோவை: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சென்றவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுதியுள்ளது.
Samayam Tamil man dead while standing in queue to change money in coimbatore
பணம் மாற்றச் சென்றவர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு


கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீரென அதிரடியாக அறிவித்துள்ளது. அதேபோல், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள் / தபால் அலுவலகங்கள் உள்ளிட்ட அறிவிக்கப்பட்ட இடங்களில் கொடுத்து புதிய ரூ.2,000 மற்றும் ரூ.100 நோட்டுகளை பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.

பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றும் பொருட்டு, பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், செல்லக் கூடிய ரூபாய் நோட்டுகள் காலியாகி வருவதாலும், செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகளை பெறுவதற்காகவும் வங்கி, ஏடிஎம்-களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்நிலையில், ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற கோவை கணபதி மூர் மார்க்கெட் தபால் நிலையத்திற்கு சென்ற ராமச்சந்திரன் (57), நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தபால் நிலையத்திற்கு சென்ற அவர், நெடுநேரம் வரிசையில் நின்றிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Man dead while standing in queue to change money in Coimbatore

அடுத்த செய்தி