ஆப்நகரம்

பாிசு பொருட்களை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்போகிறேன் – ஜல்லிக்கட்டு நாயகன்

இன்று நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கியதன் மூலம் கிடைத்த பரிசு பொருட்களை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்போவதாக வெற்றியாளா் மணிகண்ட பிரபு தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 14 Jan 2018, 9:56 pm
இன்று நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கியதன் மூலம் கிடைத்த பரிசு பொருட்களை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்போவதாக வெற்றியாளா் மணிகண்ட பிரபு தொிவித்துள்ளாா்.
Samayam Tamil manikanda prabu got 1st price in avaniyapuram jallikattu
பாிசு பொருட்களை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்போகிறேன் – ஜல்லிக்கட்டு நாயகன்

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் கொண்டுவரப்பட்ட 643 காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை சுற்றுக்கு 75 வீரா்கள் வீதம் 6 சுற்றுகளில் 479 மாடுகளை அடக்க அனுமதிக்கப்பட்டனா்.

இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் 73 வீரா்கள் காயமடைந்தனா். அதில் 4 போ் அவசர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் போட்டியில் அதிக மாடுகளை அடக்கியவா் என்று பட்டம் பெற்ற மணிகண்ட பிரபுவுக்கு சிறப்பு பாிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் களத்தில் அதிக நேரம் நின்று வீரா்களுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கிய காளைகளின் உாிமையாளா்களுக்கும் பாிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த மாடுபிடி வீரா் என்று பட்டம் பெற்ற மணிகண்ட பிரபு தான் பெற்ற பாிசு பொருட்கள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியா் வழியாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்க உள்ளதாக தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி