ஆப்நகரம்

நிரம்பும் மஞ்சளாறு: விவசாயிகள் மகிழ்ச்சி!!

தமிழகம் முழுவதும் தற்போது மழை பெய்து வருகிறது. தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை மளமளவென நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

TOI Contributor 9 Sep 2017, 1:01 pm
தேனி: தமிழகம் முழுவதும் தற்போது மழை பெய்து வருகிறது. தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை மளமளவென நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Samayam Tamil manjalar dam is getting more rain water theni farmers are happy
நிரம்பும் மஞ்சளாறு: விவசாயிகள் மகிழ்ச்சி!!


தமிழகததை ஒட்டிய கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தற்போது தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடகாவில் அதிகளவில் பெய்து வரும் மழையால் காவிரி டெல்டா விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழத்திற்கு தண்ணீர் கிடைத்து வருகிறது. இத்துடன் தமிழத்தின் மேற்கு தொடர்ச்சிமலையில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் தேவதானப்பட்டிக்கு வடக்கில் மஞ்சளாறு அணை உள்ளது.

இந்த அணைக்கு தற்போது மேற்கு தொடர்ச்சி மலைகளான தலையாறு, வரட்டாறு, இருட்டாறு, மூலையாறு மஞ்சளாறு ஆகிய மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் கிடைத்து வருகிறது. இந்த மஞ்சளாறு அணை 57 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் தண்ணீரால் தேனி மாவட்டம் பயனடைந்து வருகிறது.

கடந்த 10 நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் அணையின் நீர் மட்டம் 10 அடி உயர்ந்து, 47 அடியாக உள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணை விரைவில் நிரம்பும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Manjalar dam is getting more rain water: Theni farmers are happy

அடுத்த செய்தி