ஆப்நகரம்

ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு செப்புத் தேரோட்டம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Samayam Tamil 21 Mar 2019, 7:00 pm
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில்உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Samayam Tamil salfnal


ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 வைனவ தளங்களில் ஒன்றாகவும் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் இராஜகோபுரம் இருக்கும் உலக பிரசித்தி பெற்றஆண்டாள் கோவிலில் பங்குனி உத்திரம் தினமான இன்று ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு செப்புத் தேரோட்டம் நடைபெற்றது.திரளான பக்தர்கள் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு நான்கு ரத மாட வீதிகளின் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருமணம் ஆகாத ஆண்கள்,பெண்கள் குழந்தை பாக்கியம் இல்லதா தம்பதியினர் விரதம் இருந்துதேரினை வடம் பிடித்து இழுத்தும் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னாரின் திருக்கல்யாணத்தை புர்த்தியாக பார்த்தல் விரைவில் திருமணம் ஆகும் மற்றும் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இன்று மாலை 7.00 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இவ்விழாவை காண்பதற்க்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ப்பதால் பாதுகாப்பு நலன் கருதி கோவிலை சுற்றிகாவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி