ஆப்நகரம்

இன்று முதல் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளர்.

Samayam Tamil 19 Jul 2019, 9:04 am
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அவ்வபோது மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rain 1


வெப்பச்சலனம் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் நல்ல பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் திண்டுக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் அரபிக்கடல் மற்றும் ஆந்திரா, மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் நீர் வீழ்ச்சியில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், சுமார் 30 நிமிடங்கள் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை வதிக்கப்பட்டது.

அடுத்த செய்தி