ஆப்நகரம்

சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய மாவோயிஸ்ட்!

வேலூர் சிறப்பு சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட் பெண் கைதி ஒருவர் தன்னை கோவை மத்திய சிறைக்கு மாற்றக்கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

TNN 1 Jul 2017, 7:52 pm
வேலூர் சிறப்பு சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட் பெண் கைதி ஒருவர் தன்னை கோவை மத்திய சிறைக்கு மாற்றக்கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
Samayam Tamil maoist launches indefinite hunger protest
சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய மாவோயிஸ்ட்!


ரீனா ஜாய்ஸ் மேரி (37) எனும் பெண் கைதி கடந்த 7 மாதங்களாக வேலூர் சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது தன்னை கோவை மத்திய சிறைக்கு மாற்றக்கோரி சிறை கண்காணிப்பாளர் ஆர்.ராஜலட்சுமியிடம் மனு கொடுத்துள்ளார். தனது கணவர் கோவை மத்திய சிறையில் தண்டனை பெற்று அடைக்கப்பட்டுள்ளதை அடுத்து தன்னையும் கோவை சிறைக்கு மாற்றக்கோரி மனு அளித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை சிறையிலேயே ரீனா காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். சிறை மாற்றக்கோரி முன்னரே மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் தற்போது உண்ணா விரதத்தை தொடங்கியுள்ளார்.

மூன்று வாரங்களுக்கு முன்பே மேரி மனுவை சிறை அதிகாரிகளிடம் அளித்துள்ளார். ஆனால் மனு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறை உயர் அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று மாவோயிஸ்டுகள் ஒருவருக்கொருவர் பேசக்கூடாது என்று சிறை நிர்வாகம் தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 21ஆம் தேதி மேரி அடையாள உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி