ஆப்நகரம்

டிக் டாக் தோழியிடம் ஓட்டம்.? கணவரின் சந்தேக கொடுமையை தாங்க முடியாமல் ஓடினேன்.! புதிய வீடியோவில் வினிதா

சிவகங்கை அருகே நகைகளோடு டிக் டாக் தோழியுடன் ஓடி போனதாக வினிதா என்பவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் புதிய வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டிருக்கிறார்

Samayam Tamil 24 Sep 2019, 8:32 pm
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் வினிதா. இவருக்குத் திருமணமாகி இவரது கணவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஊருக்கு வந்த இவர் தந்து மனைவி டிக் டாக்கில் அடிமையாகி உள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து கண்டித்த கணவர், வினிதாவை அவரது தாயார் வீட்டில் தங்க வைத்துள்ளார்.
Samayam Tamil 7


தனது அம்மாவின் வீட்டிற்குச் சென்ற பின்பும் டிக் டாக் மூலம் அறிமுகமான தோழி அபியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ள வினிதா திடீரென்று வீட்டை விட்டு ஓடி விட்டதாகவும் மேலும் வீட்டிலிருந்த 50 சவரன் நகையை எடுத்துச் சென்றதாகவும் போலீசில் புகார் தெரிவித்தனர்.


இந்நிலையில் காணாமல் போன வினிதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிங்கப்பூரில் இருக்கும் எனது கணவர் தன்மீது சந்தேகப்பட்டு வந்ததாகவும், சமீபத்தில் ஊருக்கு வந்த அவர் என்னைச் சந்தேகப்பட்டு அடித்தாகவும் கூறுகிறார்.

அவரது கொடுமை தாங்க முடியாமல் தான் நான் என் அம்மா வீட்டிற்குச் சென்றேன். என்னுடன் ஓடி வந்ததாகச் சொல்லப்படும் பெண்ணுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. வீட்டை விட்டுப் போகும் பொழுது நான் மட்டும் தான் இருந்தேன். இப்பொழுதும் தனியாகத்தான் இருக்கிறேன். நான் வரும்பொழுது எந்த நகைகளையும் எடுத்து வரவில்லை. இவ்வாறு வினிதா அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி