ஆப்நகரம்

ஆர்.கே.நகரில் போட்டியிடவில்லை: மாக்சிஸ்ட் முடிவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவுசெய்துள்ளது.

TNN 30 Nov 2017, 6:16 pm
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவுசெய்துள்ளது.
Samayam Tamil marxist communist decides not to compete in rk nagar by election
ஆர்.கே.நகரில் போட்டியிடவில்லை: மாக்சிஸ்ட் முடிவு


சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாகவே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், கோவையில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.கே.நகரில் நடக்க உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் விரைவில் நடைபெற இருக்கும் அக்கட்சியின் மாநில மாநாடு பற்றியும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

திமுக தனது வேட்பாளராக மருது கணேஷ் பெயரை அறிவித்துள்ளது. அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக வேட்பாளருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளன.

தேமுதிக இத்தேர்தலை புறக்கணிப்பதாகவும் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதும் இல்லை என்றும் கூறியுள்ளது. தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூறிய நாம் தமிழர் கட்சியும் பாஜகவும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

அடுத்த செய்தி