ஆப்நகரம்

திருச்செந்தூரில் மொத்தமாக கரை ஒதுங்கும் டால்பின்கள்! சுனாமி பீதி

திருச்செந்தூர் அருகே டால்பின்கள் திடீரென்று மொத்தமாக செத்து கரை ஒதுங்கிய சம்பவம், சுனாமி பீதியை அதிகரித்துள்ளது.

TNN 27 Nov 2017, 10:24 pm
நாகையில் கடல் உள்வாங்கியதாகவும், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் இன்று மாலை சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.
Samayam Tamil massive death of 15 dolbhins stranded in tirchendur
திருச்செந்தூரில் மொத்தமாக கரை ஒதுங்கும் டால்பின்கள்! சுனாமி பீதி


இதையடுத்து, அப்படி வெளிவந்த செய்திகள் உண்மையல்ல என்றும் அவை வதந்திகள், மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சுரேஷ்குமார் அறிவித்தார்.

இந்நிலையில், சுனாமி பீதி அடங்குவதற்குள், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே 15 டால்பின்கள் திடீரென்று மொத்தமாக கரை ஒதுங்கின.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள், அவை அனைத்தையும், மீண்டும் கடலுக்குள் கொண்டு விட்டனர்.

இருந்த போதிலும், அவற்றில் 4 டால்பின்கள் மீண்டும் மீண்டும் கரை ஒதுங்கியதை. இதையடுத்து, அவைகளை உற்று நோக்கியதில் ஏற்கனவே இறந்திருந்தது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவிய நிலையில், தற்போது, டால்பின்கள் மொத்தமாக கரை ஒதுங்கிய சம்பவத்தால், மக்களிடையே பீதியை அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி