ஆப்நகரம்

ட்விட்டருக்கு டஃப் கொடுக்கும் மாஸ்டடோன்!

அதிருப்தியில் இருக்கும் ட்விட்டர் பயனாளர்கள் மாஸ்டடோன் பக்கம் சாயத்துவங்கி உள்ளனர். இது ட்விட்டர் நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Samayam Tamil 18 Nov 2019, 2:27 pm
மாஸ்டடோன் இந்த பெயர் தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம். அது என்னங்க மாஸ்டடோன் புதுசா இருக்கே? அப்படின்னு கேட்கிறவர்களுக்கு தான் இந்த பதிவு.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளம் தான் மாஸ்டடோன். ஜெர்மனியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரால் தொடங்கப்பட்ட மாஸ்டடோன் செயலியின் வயது இரண்டு. இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் மாஸ்டடோன் செயலியில் 500 எழுத்துக்களை பதிவிடலாம். ஆனால், ட்விட்டரில் தற்போது வரை வெறும் 250 எழுத்துகளை மட்டுமே பதிவிட முடியும்.

அத்துடன், கருத்து சுதந்திரம் முடக்கப்படுவது, சரிபார்க்கப்பட்ட - அதாவது, ப்ளூ டிக் கொடுக்க பாரபட்சம் காட்டுவது என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிருப்தியில் இருக்கும் ட்விட்டர் பயனாளர்கள் மாஸ்டடோன் பக்கம் சாயத்துவங்கி உள்ளனர். இது ட்விட்டர் நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாஸ்டடோன் குறித்து முழு விவரத்தை கூறும் டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் வீடியோ:

அடுத்த செய்தி