ஆப்நகரம்

முதல் முறையாக திருச்சியில் தீப்பெட்டி லேபிள் கண்காட்சி; வரலாற்றில் ஒளியேற்றும் அரிய நிகழ்வு!

தீப்பெட்டி லேபிள் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

Samayam Tamil 11 Feb 2018, 2:39 pm
திருச்சி: தீப்பெட்டி லேபிள் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
Samayam Tamil matchbox label exhibition in trichy throws light on bygone era
முதல் முறையாக திருச்சியில் தீப்பெட்டி லேபிள் கண்காட்சி; வரலாற்றில் ஒளியேற்றும் அரிய நிகழ்வு!


தபால் தலைகள், பழங்கால நாணயங்கள், உலக ரூபாய் நோட்டுக்கள் என பல்வேறு வகையாக சேகரிப்பு வழக்கங்களை கேள்விபட்டிருப்போம். அவற்றில் தீப்பெட்டி லேபிள் புதிதாய் சேர்ந்துள்ளது.

இதனை ஆங்கிலத்தில் ‘பில்லுமெனி’(phillumeny) என்று அழைக்கின்றனர். இதை திருச்சி அரசு அருங்காட்சியகம் முதல் முறையாக உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது.

அருங்காட்சியகத்தில் 3000க்கும் மேற்பட்ட தீப்பெட்டி லேபிள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வட்டார கலாச்சாரத்தை அறிந்து கொள்ள முடியும் என்று கூறுகின்றனர்.

1980கள் வரை எல்லா வீடுகளிலும் தீப்பெட்டிகள் பயன்பாட்டில் இருந்துள்ளது. அன்றைய கால கட்டங்களில், வாடிக்கையாளர்களை கவர தீப்பெட்டி நிறுவனங்கள் பல்வேறு டிசைன்கள், புகைப்படங்கள் கொண்டு லேபிள்களை உருவாக்கின.

அதில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் தலைவர்கள் இடம்பெற்றனர். மேலும் ’அணா’ எனப்படும் பழைய நாணயங்கள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில், சுதந்திர வேட்கையை மக்களிடம் விதைக்க நேதாஜி போன்ற தலைவர்களின் படங்களையும் இடம்பெறச் செய்தனர்.

Matchbox label exhibition in Trichy throws light on bygone era.

அடுத்த செய்தி