ஆப்நகரம்

அதிமுகவின் தற்போதைய சூழல் தெரியாமலேயே காலமானார் மாயத்தேவர்..! உருக்கமான தகவல்

அதிமுகவில் முதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் தேர்தலில் நின்றவரும், அதிமுகவின் முதல் எம்.பியுமான மாயத்தேவர் உடல்நலக்குறைவால் காலமானார்.

Samayam Tamil 9 Aug 2022, 3:32 pm
எம்.ஜி.ஆர்., இந்திராகாந்தி உள்ளிட்ட மறைந்த மூத்த அரசியல் தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் தான் மாயத்தேவர் (88). 1972 ஆம் ஆண்டு அதிமுகவை உருவாக்கியபோது எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்தவர். இவருக்கு மதுரை உசிலம்பட்டியை அடுத்த உச்சம்பட்டி தான் சொந்த ஊர். அதிமுக உருவாக்கப்பட்ட போது திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது, திண்டுக்கல் திமுக எம்பியாக இருந்த ராஜலிங்கம் காலமானதால் இடைத்தேர்தல் வந்தது.
Samayam Tamil mayadevar


அந்த தேர்தலில் மாயத்தேவர் அதிமுக வேட்பாளராக நின்றார். அவருக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மாயத்தேவர் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதிமுகவில் முதன்முதலில் இரட்டை இல்லை சின்னத்தை அறிமுகம் செய்தது மாயத்தேவர்தான். இவர் 80 இல் திமுகவில் சேர்ந்து எம்பியானார். அதன் பிறகு ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

மாயத்தேவர் 86 வயதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மனைவி சரஸ்வதியின் பராமரிப்பில் ஒய்வு எடுத்து வந்தார். அன்று முதல் இன்று வரை அவருக்கு அதிமுகவின் உட்கட்சி பிளவு ஆகிய எந்த விவகாரமும் தெரியாது என்கின்றனர். எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவை கட்டிக்காப்பதே அவரது ஆசையாக இருந்ததாம். 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் பேட்டி எடுக்க நிருபர்கள் சென்றபோது அப்போதைய அதிமுகவில் நிலவிய சூழல் குறித்தும் எதுவும் தெரியாமல் இருந்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை

இதுகுறித்து அவரது மனைவி பேசியபோது, எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவோடுதான் இன்னமும் இவரது உணர்வுகள் இருக்கிறது. தற்போதைய கட்சி சூழல் குறித்து அவருக்கு தெரியாமல் இருப்பதே நலம்'' என்றார். இன்று வயதுமூப்பு காரணமாக மாயத்தேவர் காலமாகியுள்ளார். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் மாயத்தேவரின் பி.ஏ.வாக இருந்தவர்தான் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி