ஆப்நகரம்

மேயர் தேர்வு, பெண்கள் இடஒதுக்கீடு: சட்ட முன்வடிவு தாக்கல்

மேயர்கள் தேர்வு முறையில் மாற்றம் மற்றும் பெண்களுக்கான இடதுக்கீடு குறித்த சட்டமுன் வடிவை தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது.

TNN 22 Jun 2016, 1:33 pm
சென்னை: மேயர்கள் தேர்வு முறையில் மாற்றம் மற்றும் பெண்களுக்கான இடதுக்கீடு குறித்த சட்டமுன் வடிவை தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது.
Samayam Tamil mayor election process and womens quota in local body elections changed in tamilnadu
மேயர் தேர்வு, பெண்கள் இடஒதுக்கீடு: சட்ட முன்வடிவு தாக்கல்


மேயர்கள் தேர்வு முறையில் மாற்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கான இடதுக்கீடு உள்ளிட்ட மாநகராட்சி சட்ட திருத்தம் குறித்த சட்டமுன் வடிவை தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார்.

அதில், மாநகராட்சிகளுக்கான தேர்தல் கட்சிகளின் அடிப்படையிலேயே தற்போது நடத்தப்படுகின்றது. சில மாநகராட்சிகளில் மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவ்வளவாக மாநகராட்சி மேயருக்கு இல்லாத காரணத்தால், மாமன்றங்கள் முறையாக செயல்படுவதில்லை. எனவே, மாமன்ற உறுப்பினர்கள் மறைமுகமாக மேயர்களை தேர்ந்தெடுப்பது என அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் இந்த சட்டமுன்வடிவை தாக்கல் செய்ததும், திமுக இந்த சட்ட முன்வடிவை ஆரம்பத்திலேயே எதிர்பதாக திமுக-வின் மா.சுப்பிரமணி எம்எல்ஏ., எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட முன்வடிவை தாக்கல் செய்ய சபாநாயகர் அனுமதி அளித்ததன் மூலம் இந்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், உள்ளாட்சி தேர்தல்களில் 50 சதவீததிற்கு பதில் 3-ல் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்குவது குறித்த சட்டமுன்வடிவும் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அடுத்த செய்தி