ஆப்நகரம்

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு; மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளருக்கு மதிமுக ஆதரவளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 3 Dec 2017, 11:03 am
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளருக்கு மதிமுக ஆதரவளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil mdmk supports dmk in rknagar byelection
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு; மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு!


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. இதற்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம், நடிகர் விஷால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திமுக வேட்பாளர் மருது கணேஷிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடைபெற்று வருகிறது.

அதில் திமுகவிற்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் கோவையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

MDMK supports DMK in RKNagar ByElection.

அடுத்த செய்தி