ஆப்நகரம்

அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்: ஜாக்டோ ஜியோ

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக தமிழக அரசைக் கண்டித்து வரும் 8ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 4 Aug 2018, 7:30 am
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக தமிழக அரசைக் கண்டித்து வரும் 8ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.
Samayam Tamil jactto geo


சென்னையில் இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு ஆலோசனை நடைபெற்றது. பின்னர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் இன்று உயர்மட்டக் குழு கூட்டம் சென்னை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம். சமீபத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி பேசிய பேச்சு வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. அதில் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் கண்ணியமற்று பேசியுள்ளார்.

ஆராம்ப பள்ளி ஆசிரியர் சொல்லி கொடுத்த காரணத்தினால் தான் இன்று அவர் முதல்வராக உள்ளார். இதே போல் தமிழ்நாட்டில் உள்ள வருவாய்த்துறை வளர்ச்சித்துறையில் அரசு ஊழியர்கள் பணிபுரிவதால் தான் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. முதல்வர் பழனிசாமி இது புரியாமல் பேசியுள்ளார். இதனை கண்டித்து வரும் 9ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார்கள். முதல்வர் பழனிசாமி அவருடைய பேச்சுக்கு வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்.'


இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

அடுத்த செய்தி