ஆப்நகரம்

மனநலம் பாதித்த நபரை மீண்டும் குடும்பத்துடன் இணைத்த ஃபேஸ்புக்!

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், ஃபேஸ்புக் உதவியால் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 Oct 2018, 10:04 am
சிவகங்கை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஃபேஸ்புக் உதவியால் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil மனநலம் பாதித்த நபரை மீண்டும் குடும்பத்துடன் இணைத்த ஃபேஸ்புக்!
மனநலம் பாதித்த நபரை மீண்டும் குடும்பத்துடன் இணைத்த ஃபேஸ்புக்!


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காலவாய் பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் முத்துபாண்டியன் மன நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை பேருந்து நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்த முத்துபாண்டியனை, தொண்டு நிறுவனம் ஒன்று மீட்டு அவரை இரண்டு ஆண்டுகளாக பராமரித்து வந்தது. மேலும் முத்துபாண்டியன் நிலைமை குறித்து உறவினர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், அவரது புகைப்படத்தையும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து முத்துபாண்டியன் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்த உறவினர்கள், போலீசார் உதவியுடன் தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். மேலும் தங்கள் மகனை இரண்டு ஆண்டுகளாக பராமரித்து வந்த தொண்டு நிறுவனத்திற்கு அவர்கள் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நபர் பேஸ்புக் உதவியால் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி